சென்னை சூப்பர் கிங் – கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் உச்சபட்ச அன்பின் வெளிப்பாடு

இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஆதரவே அதிகம் எனலாம். அந்த வகையில் அதிக ரிசிகர் பட்டாளத்தைக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் மிகையில்லை. இவ்வாறான அணிமேல், தான் கொண்ட அன்பை அணியின் ரசிகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ள விதம் அந்த அணியையே நெகிழச் செய்துள்ளது.

இந்த அணியின் ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சி.எஸ்.கே போட்டிகளில் வழங்கப்படுகின்ற ரிக்கெட் போன்று வடிவமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற அவரது திருமணத்திற்கான அழைப்பிதழையே இவ்வாறு அவர் வடிவமைத்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!


வினோத் என்ற ரசிகர் தனது திருமணத்திற்கு வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தனது நண்பர் ஒருவரின் சிந்தனையில் இவ் அழைப்பிதழ் வடிவமைப்பை செய்துள்ளார். அதனைப் பாராட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் தமது டுவீட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளது.

error: Alert: Content is protected !!