விலைவாசியைச் சமாளித்து சிக்கனமாக வாழ சூப்பரான ஐடியாக்கள்.

நம்முடைய அன்றாடத் தேவைகளை  நிறைவேற்றுவதே நம்மில் பலருக்குச் சவாலாக இருக்கின்றது. ஏனெனில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் அரிசி, மா, உப்பு, புளி தொடக்கம் பெற்றோல் வரை அனைத்தினுடைய விலையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கின்றது.

இத்தகையதொரு சூழ்நிலையில் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்குப் பெரும் சிரமப்படவேண்டி இருக்கின்றது. இதனால் சேமிப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. இருப்பினும் ஓரளவிற்கு இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு ஏதேனும் வழிவகைகளைக் கையாள வேண்டிய தேவையில் அனைவரும் இருக்கிறோம்.

எகிறுகின்ற விலைவாசியைச் சமாளித்து சிக்கனமாக வாழ்வதற்கு சில ஐடியாக்கள் இதோ.

அன்றாடச் செலவுகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செலவுகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது என்பது உங்களுடைய அடுத்த மாத பட்ஜெட்டை தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கும். அத்தோடு எதற்காக அதிகம் செலவளிக்கின்றோம் என்கின்ற விடயத்தையும் அறிந்து அதனை எப்படிச் சிக்கனமாகக் கையாள வேண்டும் என்கின்ற ஒரு வழியும் பிறக்கும்.

மளிகைப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்யுங்கள்.

வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கும்போது தொட்டுத் தொட்டு ஒவ்வொன்றாக வாங்காதீர்கள். அதனால் பணமும் விரயம் உங்களுடைய நேரமும் விரையமாகும். மொத்தமாக வீட்டிற்குத் தேவையான பொரட்களை பட்டியலிட்டு வாங்கிக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக வாங்குவதை விட மொத்தமாக வாங்கும்போத கொஞ்சம் பணத்தை சிக்கனப்படுத்தலாம். சிறு துளிதானே பெரு வெள்ளம்.

சுவையூட்டிகளை நீங்களே வீட்டில் தயாரித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகக் கிராமங்களில் வீட்டிற்குத் தேவையான சுவையூட்டிப் பொருட்களான மிளகாய் வற்றல், ஊறுகாய், மாங்காய் வற்றல் , மிளகாய்த் தூள், அரிசி மா, பட்டர் மா போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்துக் கொள்வார்கள். இது உண்மையில் ஒரு நல்ல முறை. இது ஆரோக்கியமானதும் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும். அனைவரும் இந்த முறைகளைக் கடைப்பிடித்தால் வீண்செலவுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

வீட்டுத்தோட்டத்தை மேற்கொள்ளுங்கள்.

மரக்கறிகளின் விலை இப்போது எப்படிப் போகின்றது? யோசித்துப் பாரடத்திருக்கின்றீர்களா? அதைவிட நீங்கள் வாங்கும் மரக்கறிகள் அனைத்தும் ஊசியேற்றப்படாத தரமான மரக்கறிகளா? இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே மரக்கறித்தோட்டம் ஒன்றை ஆரம்பியுங்கள். வீட்டிற்கத் வையான மரக்கறிகளை நீங்களே தயாரித்துக் கொள்வதனூடாக அந்தச் செலவுகளைக் குறைத்து ஆரோக்கியமாகவும் வாழலாம்.

தரமான நீண்ட பாவனையுள்ள பொருட்களைத் தேர்வு செய்யுங்கள்.

 எந்தவொரு பொருளையும் கொள்வனவு செய்யும்போது விலையை விட தரத்தை முதலில் கவனியுங்கள். அந்தப் பொருள் நீண்டு நிலைத்த பாவனை கொண்டதா என்பதைப் பற்றி கொஞ்சம் யோசித்தக் கொள்ளுங்கள். குறைந்த விலையுள்ள பொரட்கள் பழுதாகி அடிக்கடி வாங்குவதை விட தரமான பொருட்களை வாங்கி நீண்ட காலம் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் பணத்தை தாராளமாகச் சேமித்தக் கொள்ளலாம்.

என்ன  தோழிகளே, தோழர்களே நீ்ங்கள் உங்கள் உழைப்பை சேமித்து சிக்கனமாக வாழத் தயாராகிவிட்டீர்கள். மிக நல்லது. இனி வாழ்வில் வெற்றிதான். அடுத்த பகுதியில் மற்றுமொரு பயனுள்ள தகவலோடு சந்திக்கின்றேன்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!