fbpx

பிள்ளைகளைக் கொல்லும் தாய்மார் – திணறும் தமிழகம் – திடுக்கிட வைக்கும் உண்மைகள்

தினமும் சில கொலைகள் என்ற நிலைக்கு இந்தியா மாறியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. அதுவும் பெற்ற பிள்ளைகளைத் தாய்மாரே கொலை செய்கின்ற கொடூரம் தற்போது அங்கு அதிகரித்துச் செல்வதனைக் காண முடிகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினமும் தாய் ஒருவர் தன் மகளை நீரில் அமுக்கிக் கொலை செய்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் சாமளபுரத்தில்  வசிக்கும் நாகராஜ் என்பவரின் மனைவி தமிழ் இசக்கி என்பவரே ஷிவன்யாஶ்ரீ என்ற தனது இரண்டரை வயது மகளை கணவன் வேலைக்குச் சென்றிருந்த நேரம் வீட்டில் தண்ணீர் பரல் ஒன்றில் இருந்த நீரில் அமுக்கிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்அந்நேரம் கணவன் வீட்டிற்குத் திரும்பியதால் தன் மகளை யாரோ கொலைசெய்து விட்டதாக நாடகமாடியுள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிமேல் சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

காலவர்களின் விசாரணையில் அவரது பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் காவலர்கள் தொடர்ந்தும் அவரை விசாரித்ததில் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.இந் நிலையில் இக் கொலைக்கு கணவன் மனைவியிடையே அண்மைக் காலமாக காணப்பட்ட  முரண்பாடே காரணம் என்று கூறப்படுகின்றது.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!