இலங்கையில் உடனடியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் ஐ.நா

இன்று ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்திலே இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிலே ஐ.நா செயற்குழு,  இலங்கை உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்படுகின்ற புதிய சட்டமும் சர்வதேசத்தினது மனித உரிமைக் கொள்கைகளுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் எனவும் அக் குழு இன்றைய கூட்டத் தொடரில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரும் தீர்மானம் கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத் தொடரிலும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!