நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் நடக்காத திருமணம் – இரண்டாவது முறையும் மணமகன் ஏமாற்றம்

இந்தியாவின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் தொகுதியின் எம்.எல்.ஏ யான ஈஸ்வரனுக்கு இன்று திருமணம் என ஏற்பாடாகியிருந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இத்திருமணம் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

மணப்பெண் சந்தியா மாயமானார். எனினும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார். அதற்கு அவர் தெரிவித்த காரணம் தன்னை விட 20 வயது அதிகமாக அவர் இருப்பதாகவும் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரிலேயே திருமண ஏற்பாடு நடைபெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்நிலையில் வேறு ஒரு பெண்ணை நிச்சயித்து குறித்த தினத்தில் திருமணம் நிச்சயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று திருமணம் நடைபெறாதென இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான மணப்பெண் இதுவரை கிடைக்காமையே திருமணம் நடைபெறாமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!