மனைவி பிள்ளைகளைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்யக் காரணம் என்ன? – கடிதம் சொன்ன பதில்.

“மஞ்சள் காமாலை நோய் தீவிரமாகி ரத்தத்துடன் கலந்துவிட்டதால் இனி நான் பிழைக்க மாட்டேன் எனத் தெரிந்தது. நான் இறந்துவிட்டால் என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற காரணத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கொடுத்தேன்.

அதன் பிறகு நான் தூக்கிட்டுக் கொள்கின்றேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துள்ளார் தழிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

திருப்பூரில் டிசைனராக தொழில் புரிந்து வரும் இவருக்கு மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகரித்ததால் இனி ஒன்றும் செய்ய முடியாதென மருத்துவர்கள் தெரிவித்துவிட்ட நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார்.  இந்நிலையில் இவர் தனது மனைவி பிள்ளைகளுக்கு அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கொடுத்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் மகேந்திரம் எழுதிய கடிதத்தைக் கண்டுபிடித்த பின்னரேயே கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்ததாகத் தெரிவிக்கின்றனர்

 

error: Alert: Content is protected !!