fbpx

சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் செய்துடாதீங்க..!

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரம்மாதம்”அப்பிடி பாடிக்கொண்டு ரசித்து ருசித்து உணவு உண்டு களிப்பவரா நீங்கள்? கை குடுங்க உணவே மருந்து. உணவை விட சிறந்த மருந்து ஏது உண்டு. ஆனால் அந்த உணவை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கின்றோமா என்பதுதான் முக்கியமான விடயம்

எவ்வாறு உணவை உண்பதற்கு என்று  நியதிகள் உண்டோ அதே போலவே உணவை உண்ட பின் செய்யக் கூடாத விடயங்கள் என்றும் சில விடயங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க.சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணித்தியாலங்கள் கழித்தே குளிக்க வேண்டும்

சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும். சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது.

காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்

சாப்பிட்தன் பிறகு குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!