பெண்களே நீங்கள் செய்வதற்கு உகந்த உடற்பயிற்சிகள் எவையென்று தெரியுமா?

பொதுவாக பெண்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளில் முக்கியமானது எடை அதிகரித்தல். அதுவும் திருமணமான பெண்களுக்கு உடம்பு அதிகமாக வைத்து தொப்பையும் வைத்து விடுகின்றது.இதனால் அவர்கள் இலகுவாக முதுமையான தோற்றத்திற்குத் தள்ளப்படுகின்றனர் இதற்கு இலகுவாக வீட்டிலிருந்தவாறே செய்யக் கூடிய உடற்பயிற்சிகள்.

பல உள்ளன.பெண்கள் மேற்கொள்ளத் தக்க உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.. ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி 2.ஆனோ ரோபிக் உடற்பயிற்சி 3யோகாசனப் பயிற்சிகள்4.ஸ்கிப்பிங் பயிற்சிகள்.இந்த வகையான உடற்பயிற்சிகளை வயது வேறுபாடின்றி அனைத்து வயதினரும் செய்யக் கூடியதாக இருக்கும்.

அதாவது உடலானது உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டுமென நினைக்கின்ற ஒவ்வொரு பெண்ணும் இதனைச் செய்து பார்க்கலாம்.அவ்வாறு எந்த உடற்பயிற்சியை எந்த மாதிரியானவர்கள் செய்யலாம் என்று பார்ப்போம்.

இடுப்புப் பகுதியானது கொடி போன்று இருப்பது அழகல்ல உறுதியுடனும் ஓரளவு சதைப்பிடிப்புடனும் இருப்பதுதான் அழகு. அழகான இடுப்பைப் பெறுவதற்கு ஏரோபிக்ஸ் ஸில் கிவ்னாட் என்கின்ற பயிற்சியினைப் பெண்கள் தொடரந்து செய்து வந்தால் பயன்பெறலாம்

 

சில பெண்களுக்கு கைகள் மெல்லியதாக இருக்கும். உடம்பு அளவாக இருந்து கைகள் மாத்திரம் குச்சியாக இருந்தால் நன்றாகவா இருக்கும்.? அவர்கள் ஒரு கையால் மிக எளிதாகத் தூக்கக் கூடிய ”ரூபிடாய்“ என்கின்ற பாரம் குறைந்த வெயிட்டை கையில் கீழிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றித் தூக்கி 5 நிமிடம் தொடர்ந்து செய்து வரவேண்டும்.இரவு தூங்க போகும் போதும், காலை எழும்போதும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும். இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும்

 

 ஸ்கிப்பிங் பயிற்சியானது ,  ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமமானது. ஒரு மணி நேர ஸ்கிப்பிங் பயிற்சியால்  1300 கலோரிகள் வரை எரிக்கலாம். ஸ்கிப்பிங்கால்  உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம்.  ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. அனைத்து வயதுப் பெண்களுக்கும். ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியதுதான் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி.

 

பெண்கள் தினமும் வேலைகளை முடித்த பின் ஒரு வேளை சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது இருபது நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!