யாழ் திருமணத்தில் உணவு விசமானதா? உணவில் விசம் கலக்கப்பட்டதா? திடுக்கிட வைக்கும் உண்மைகள்

நேற்று முன்தினம் யாழ் கோண்டாவில் பகுதியிலுள்ள திருமண மட்டபம் ஒன்றிலே திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்ற வேளையில் அங்கு சமைக்கப்பட்ட உணவு விசமானதாகவும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் அன்றைய நிகழ்வில் என்ன நடந்தது என்ற விபரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. அன்றைய தினம் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்காக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சாரதி ஒருவர் வெளியே போகவேண்டி முதலில் உணவைச் சாப்பிட்டுள்ளார். இந் நிலையில் அவர் திடீரென்று மயக்கமடைந்துள்ள நிலையில்,

அங்கிருந்த ஒருவர் உணவில் கொஞ்சம் எடுத்து நாய் ஒன்றிற்கு வைத்துப் பார்த்துள்ளார். இந்நிலையில் நாய் உணவைச் சாப்பிட மறுத்ததால் சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து சென்று உணவைப் பரிசோதித்ததில் உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் மேலதிக பரிசோதனைக்காக உணவு முழுவதும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந் நிலையில் உணவில் விசம் எவ்வாறு கலக்கப்பட்டது , யாரால் விசம் கலக்கப்பட்ட என்று மண்டப நிர்வாத்தினர் குழம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்த போதிலும் திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் அன்றைய நிகழ்வில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கின்றனர்.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!