fbpx

ராஜீவ் கொலைக் குற்றக் கைதிகள் விடுதலைக்கு தடைபோடும் தரப்புக்கள்.

தமிழ்நாட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டமொன்றில் வைத்து முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலைக் குண்டுதாரி ஒருவரின் தற்கொலைத் தாக்குலில் உயிரிழந்திருந்தார். அக் கொலைக்குத் திட்டமிட்டதாகத் தெரிவித்துக் கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேருக்கு பல்வேறு கட்ட விசாரணைகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா, குற்றவாளிகள் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்ததால் அவர்களை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக சட்டமன்றில் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் அவ் ஏழு பேரின் விடுதலைக்கு மத்திய அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு விடுதலையைத் தடைசெய்து வந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தமிழக அரசு சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பில் தாமே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந் நிலையில் பல்வேறு தரப்பினரும் விடுதலைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தவிர்ந்த இந்திய தேசியக் கட்சிகள் அனைத்தும் அவர்களின் விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவின்  சுப்பிரமணியன் சுவாமி போன்ற ஒருசில அரசியல் தலைவர்கள் இன்னமும் அவர்களின் விடுதலைக்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகின்றனர்.

தற்போது அத் தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்டவரும் அப்போது ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவருமான பொலிஸ் அதிகாரி அனுசியா டெய்சி, குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்று கருத்து வெளியிட்டுள்ளார்.  “அவர்களை விடுவிக்கட்டும் ஆனால் அவர்களால் செத்து மடிந்த அத்தனை பேருக்கும் உயிர்கொடுத்து எழுப்பிவிட முடியுமா? “ என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!