fbpx

இலங்கை கிழக்கில் மாயக்கல்லி மலையில் விகாரைக்குக் காணி – மக்கள் எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இறக்காமம் பிரதேச செயலர் பிரிவுக்கு உ ட்பட்டட மாயக்கல்லி மலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மக்களின் பலத்த எதிர்ப்புகளின் மத்தியிலும் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு காரணம் அப்பகுதியில் முஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழ்வதாலாகும்.

எனினும் மக்களின் எவ்விதமான எதிர்ப்புகளும் உரிய தரப்பால் பரிசீலிக்கப்படவில்லை என்றே தெரிகின்றது. இந்நிலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஒரு ஏக்கர் காணியை பௌத்த விகாரை அமைப்பதற்காக தற்போது ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ எழுத்துமூல அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அவ் விடயம் தொடர்பாக பலரும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.  காரணம் குறித்த பகுதியில் விகாரை அமைக்கப்படும் பட்சத்தில் அங்கு பௌத்தர்கள் எதிர்காலத்தில் குடியேற்றப்படலாம் என அப் பிரதேச மக்கள் அஞ்சுகின்றனர். குறித்த பகுதியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை ஒரு சிங்கள குடியிருப்பு கூட இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!