இலங்கையில் வாள்வெட்டில் ஈடுபட்டவரைச் சுட்டுத் தள்ளிய வீட்டு உரிமையாளர்

முல்லைத்தீவில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் யாழ் பல்கலைக் கழக மாணவன் திலகநாதன் கபிலன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பின் கைவேலி பகுதியில் மருதமடு எனும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு வீடு ஒன்றினுள் புகுந்த குழு ஒன்று தாக்குதல் நடாத்தியிருந்த நிலையில் வீட்டு உரிமையாளர் தற்காப்பு நடவடிக்கையாக தன்வசமிருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மேற்படி பல்கலை மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாளால் வெட்ட வருபவரைக் கொலை செய்யும் உரிமை பாதிக்கப்படும் நபருக்கு இருப்பதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் யாழ் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

error: Alert: Content is protected !!