இலங்கை முப்படைகளின் அலுவலகப் பிரதானி வெளிநாடு சென்றது – மைத்திரியின் சம்மதத்துடன் – சட்டத்தரணி தெரிவிப்பு

இலங்கையில் கடந்த 2008,2009 காலப்பகுதியில் கொழுப்பின் சில பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர் நேவி சம்பத்  சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் இலங்கை முப்படைகளின் அலுவலகப் பிரதானி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முப்படைகளின் அலுவலகப் பிரதானியாகிய ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் மைத்திரிபால சிறிசேனவின் சம்மதத்துடனேயே வெளிநாட்டுக்கு பயணமானதாக அவரது சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கோட்டை நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

முப்படைகளின் அலுவலகப் பிரதானியாகிய அவர் குற்றப் புலனாய்வால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்குத் தெரியாமல் நாட்டைவிட்டுச் செல்வதென்பது பாரிய விடயமாகும். அவர் வெளிநாடு சென்ற விடயம் மைத்திரிபாலவுக்கும், வேறு உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்துள்ளது. எனவே அவர் விடயத்தில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!