இலங்கையில் தேர்தல் முன்னதாக நடத்தப்பட சாத்தியமில்லை – பிரதமரும் தெரிவிப்பு

இலங்கையில் முன்னதாக தேர்தலை நடாத்துவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறும் இல்லை என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வியட்நாமுக்குச் சென்றுள்ள பிரதமர் அங்கு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைத்  தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னதாக தேர்தல் நடைபெறுவதற்குச் சாத்தியமில்லை என்றும் அவ்வாறு இடம்பெறுமாயின் அதற்கு தானே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

error: Alert: Content is protected !!