நீரோடு வாழும் ஓர் மனிதர் – கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு நோயா?

சுகதேகி ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் இரண்டு லீட்டர் வரையான நீரை அருந்தலாம் என்று மருத்துவக் குறிப்புக்கள் சொல்கின்றன. ஆனால் ஒரு மனிதன் தினசரி 20 லீட்டர் வரையான நீரைப் பருகுகின்றான் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

நமக்கு ஆச்சரியம் தான். ஆனால் அந்த நீரைப் பருகுகின்ற மனிதருக்கோ அது வேதனையானது. ஏனென்று கேட்கிறீங்களா? ஆம் அவருக்கு ஒரு விதமான வளர்சிதைமாற்ற நீரிழிவு நோய்த் தாக்கம் உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிறப்பிலிருந்தே இந் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கும் அவருக்கு சிறு வயதில் இதன் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லையாம். ஏனெனில்,

அவரைக் கவனிப்பதற்கு நண்பர்கள் பெற்றோர் என்று நிறையப் பேர் இருந்துள்ளார்கள். ஆனால் இப்போது வளர்ந்து தொழில் செய்கின்ற நிலையில் இதனால் அவர் கஸ்டத்தை அனுபவிக்கின்றார். தினமும் அவ்வளவு நீரை அருந்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளதாக கவலைப்படுகின்றார்.

தற்போது தினமும் நீரை அருந்திக்கொண்டே இருக்கின்றாராம். நாம் நீரை அருந்தாவிட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஏற்படும் மாற்றங்களான உடலில் நீரிழப்பு, தலைச்சுற்றல், உதடுகள் வெடித்தல், போன்றன அவருக்கு இரண்டு மூன்று மணித்தியாலங்கள் நீரைக் குடிக்காமல் இருந்துவிட்டால் வந்து விடுகின்றனவாம்.

இவ்வாறு இக் கொடிய நோயால் அவதிப்படுகின்ற அந்த மனிதர், ஜேர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரான மார்க் வூப்பென்ஹார்ஸ்ட் என்பவராவார். 34 வயதாகும் இவர் இதனால் தொடர்ச்சியாக நீரை அருந்திக்கொண்டே இருக்கின்றாராம்.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!