கற்பூரவள்ளியில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா?

“காச இருமல் கதித்தம சூரிய பேசு புற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங் கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங் கற்பூர வள்ளிதனைக் கண்டு”என்னும் பாடல் வரிகளை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். ஆனால் உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்குச் சளி பிடித்தால் வீட்டிலுள்ள வயதானவர்கள் முதலில் பரிந்துரைப்பது கற்பூரவள்ளியைத்தானே?

ஆம் கற்பூரவள்ளி என்னும் செடியில் நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு.Coleus aromatics என்னும் மருத்துவப் பெயர்கொண்ட இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இது சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த மருத்துவ பலன்களை அளிக்கக் கூடியது.

இந்தக் கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள் எவை என்றும் அவற்றின் மூலம் தீரக்கூடிய நோய்கள் எவையென்றும் பார்க்கலாம்  வாங்க.காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கற்பூர வள்ளி இலையைச் சாறு பிழிந்து அதனோடு பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையும்.

பிள்ளைகளுக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்.

கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலை வலி குணமாகும்.கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!