திருநங்கையாய் தோற்றம் மாறிய இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் திருநங்கை போன்று உடையணிந்து வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. புகைப்படம் படத்திற்காக வேடமிட்டு எடுக்கப்பட்டதோ என மக்கள் நினைத்தனர். எனினும் உள்ளே விடயத்தைப் பார்த்த போதுதான் புரிந்து கொண்டார்கள் கௌதம் கம்பீரின் மனிதநேய செயற்பாடுகளை.

டெல்லியில் திருநங்கைகளுக்க மட்டும் நடைபெறுகின்ற ஹிக்ரா ஹப்பா எனும் விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு கௌதம் கம்பீர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வில் கலந்துகொண்டு திருநங்கைகளை உற்சாகப்படுத்தவே அவர் இவ்வாறு கலந்து கொண்டுள்ளார். இதனால் துப்பட்டா அணிந்து நெற்றியில் குங்குமம் தரித்து திருநங்கையாகவே தோன்றி நிகழ்வுகளைத் தொடக்கி வைத்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அது மட்டுமன்றி அக் காட்சிகளைத் தனது டுவிட்டரில் பதிவிட்டு, ஆன் அல்லது பெண்ணாக இருப்பதென்பது முக்கியமல்ல மனிதநேயம் மிக்கவர்களாக இருப்பதே முக்கியமானது என்றும் பதிவிட்டுள்ளார். அவரது மனிதநேய பண்புகளை யாவரும் பாராட்டி வருகின்றனர்.

error: Alert: Content is protected !!