அழகிரியைத் தூண்டிவிடும் ஆதரவாளர்களும் மனைவியும் – குழப்பத்தில் கருணாநிதி குடும்பம்

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் அவரது வாரிசுகளிடையிலான முரண்பாடு அதிகரித்துச் செல்வதையும் தி.மு.க வின் உடைவில் அரசியல் லாபம் தேடுவோர் சிலர் உன்னிப்பாக அவர்களிடையிலான முரண்பாட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையினையும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்திய அரசியல் அரங்கில் காணலாம்.

இந் நிலையில் கலைஞரின் மறைவின் பின்னர் அழகிரி மீண்டும் தி.மு.க வில் இணைக்கப்படுவாரா என்ற கேள்வி பலர் மனதில் இருந்தபோதிலும் தி.மு.க அழகிரியை ஒரு பொருட்டா எடுத்துக் கொள்ளாமல் அவரது கோரிக்கை, மற்றும் ஊர்வலம் போன்றவற்றையும் – தன்னை தி.மு.க வில் இணைக்காவிட்டால் திருப்பரம்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் தி.மு.க பெரும் தோல்வியைத் தழுவும் என்ற அவரது எச்சரிக்கையையும் அமைதியாக நோக்கியது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ள விடயம் என்னவென்றால் , அழகிரி ஆதரவாளர் சிலரும், அழகிரியின் மனைவியும் கூறியுள்ள கருத்துக்களே.

அழகிரியின் மனைவி அழகிரியிடம், ‘உங்கள் தந்தை தொடர்ச்சியாக வெற்றியீட்டிய திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக நில்லுங்கள், நாங்கள் உங்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றோம்.’ என்று கூறியுள்ளாராம்.

அவ்வாறே அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து, ‘கலைஞர் எழுச்சிப் பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பை அழகிரி தொடங்கவுள்ளார் என்றொரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

எனினும் இசக்கிமுத்துவின் கருத்தை அது அவருடைய சொந்தக் கருத்து என அழகிரி மறுத்துள்ளார். இந் நிலையில் அழகிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தி.மு.க வினரதும் தி.மு.க வின் உடைவில் அரசியல் இலாபம் தேட சமயம் பார்த்துக் காத்திருக்கும் தரப்பினரதும், மக்களதும் எதிர்பார்ப்பாகும்.

error: Alert: Content is protected !!