எதிர்காலத்தில் கவலைப்படாமல் இருக்க!! இப்பவே கரப்பான் பூச்சியை நண்பனாக்கி கொள்ளுங்க.

கரப்பான் பூச்சி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் பயம் தான். பயம் என்று சொல்வதை விட பெண்களுக்கு கரப்பான் பூச்சியைப் பார்த்தால் அருவருப்பென சொல்லலாம். ஆனால் எதிர்காலத்துல இந்த கரப்பான் பூச்சி தான் அனைவருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வரப்போகுதாம்.

அமெரிக்காவில் புதிய ஆராய்ச்சி ஒன்றை நடத்துகின்றனர். இதனால் கரப்பான் பூச்சியை அனைவராலும் கட்டுப்படுத்த முடியுமாம். கனெக்ட்டிகட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அபிஷேக் தத்தா என்ற துணைப் பேராசிரியரும் அவரது மாணவரான எவன் ஃபால்க்னரும் சேர்ந்து இதைச் செய்துள்ளனர். இதனுடைய தொழில்நுட்பம் முடிவடைந்ததும் இது வெளிவருமாம்.

இதன் ஆராய்ச்சிக்காக மடகஸ்காரை சேர்ந்த ஒரு கரப்பான் பூச்சியை பயன்படுத்தியுள்ளனர். இதில் ஆன்டி வயர்கள் இணைக்கப்பட்டிருக்குமாம். சிறிய ரோபர்ட்க்கு பதிலாக இந்த கரப்பான் பூச்சியை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் வெப்பநிலையைக் கண்காணிக்கும் சென்சார் ஒன்றையும் இந்த சிப்பில் பொருத்தியுள்ளார்களாம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

எதிர்காலத்தில் நாம் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால், இதன் மூலம் கண்டுபிடித்து தீர்வு காணலாம். இனிமேல் கரப்பான் பூச்சியை எதிரியாக பார்க்காமல் நண்பனாக பாருங்க.. அது தான் எதிர்காலத்தில் எல்லோருக்கும் உதவி செய்யப்போகிறது.

 

error: Alert: Content is protected !!