fbpx

கொலை குற்றவாளி என் மனைவியை திருமணம் செய்துகொண்டான். வெளிநாடு சென்று வீடு திரும்பிய கணவன் பொலீஸில் பரபரப்பு புகார்..!

இந்த நீதிமன்றம் வித்தியாசமான பல வழக்குகளை சந்திந்து இருக்கும் என பராசக்தி திரைப்படத்தில் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சூப்பரா வசனம் பேசி இருப்பார். அதே நிலையில் ஒருவர் கேரளா பொலீஸில் புகார் அளித்துள்ளார். வழக்கு என்ன என்றால்..?

என் மனைவியை கொலை குற்றவாளி ஒருவர் திருமணம் செய்துகொண்டார் என்பது தான். மேலும் அவரது மனுவை பார்க்கலாம் நானும் என் மனைவியும் திருமணமாகி மகிழ்ச்சியுடன் இருந்தோம்.எமக்கு குழந்தைகளும் இருக்கின்றார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக நான் பெஹரின் நாட்டிற்கு வேலைக்கு சென்றேன் அங்கு இருந்து உழைத்து என் மனைவி குழந்தைகளுக்கு அனுப்பினேன்.

கடந்த சில மாதங்களாக என் உறவினர்கள் என்னை நாட்டிற்கு வரும் படி அழைத்துக்கொண்டிருந்தனர். காரணம் எதுவும் சொல்லவில்லை. என் மனைவியும் அதிகம் பேசுவது இல்லை. நான் வேலையை விட்டுவிட்டு நாடு வந்தேன் இங்கு வந்து பார்த்த போது தான் நடந்த விபரீதம் அறிந்தேன்.

என் மனைவி என்னை விட்டு விட்டு கொலை வழக்கில் கைதாகி சிறைதண்டனை அனுப்பவித்த கிர்மணி மனோஜ் என்பவரை பரோலில் எடுத்து திருமணம் செய்துள்ளார்.என புகார் கொடுத்துள்ள அதே நேரம் எங்கள் இருவருக்கும் சட்ட ரீதியாக இன்னும் விவாகரத்து நடக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் குழந்தைகள் போதும் எனக்கு என் குழந்தைகளை சட்ட ரீதியாக பெற்றுக்கொடுங்கள் என கூறியுள்ளார். இதனால் கேரளா பொலீஸ் விசித்திரமான கேஸ் என சிவாஜி ஸ்டைலில் வசனும் பேசிக்கொண்டிருக்கும் என நினைக்கலாம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!