பழைய கைக்குண்டொன்று யாழ் பல்கலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து பழைய கைக்குண்டொன்று வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த குண்டு பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு வருகைதந்து குண்டை எடுத்துச் சென்றுள்ளனர்.

புனரமைப்புப் பணிகள் இடம்பெறும் யாழ் பல்கலைக் கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய பகுதியில் சுற்றுமதில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் நிலத்தை வெட்டிபோதே மேற்படி கைக்குண்டைக் கண்டு பிடித்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில்  யாராவது அங்கு அதனைப் புதைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!