fbpx

மிகவும் சக்திவாய்ந்த பக்க விளைவுகள் இல்லாத வலிநிவாரணி மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலே இன்றைய நிலையில் வலிநிவாரணி மாத்திரை பாவிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இவ்வாறு நாம் பாவிக்கின்ற வலி நிவாரணி மாத்திரைகள் எவ்வளவு பக்க விளைவுகளை எமக்கு ஏற்ப்டுத்துகின்றன என்று நாம் சிந்திப்பதில்லை. ஒவ்வொரு மாத்திரையும் ஏதோ ஒரு அளவில் நிச்சயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மையே.

அமெரிக்காவிலே வலி நிவாரணியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனால் அமெரிக்கர்களின் ஆயுட்காலம் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்களால் இவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது சந்தைகளில் உள்ள வலி நிவாரணிகளிலும் 100 மடங்கு செயற்றிறன் மிக்கதும் பக்க விளைவுகள் இல்லாததுமான வலி நிவாரணி மாத்திரையினை அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். AT – 121 எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் வலிநிவாரணி தற்போது அமெரிக்க சந்தைகளில் காணப்படும் மோபின் எனும் வலி நிவாரணியிலும் பல மடங்கு சக்தி வாய்ந்ததென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள AT-121 வலி நிவாரணி மாத்திரையானது மோபின் போன்று அல்லாமல் போதையற்றதெனவும் குறிப்பிடப்படுகின்றது.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!