இலங்கையில் படையினரைக் கொண்டு தம் தேவைகளை நிறைவேற்றிய ஆட்சியாளரே தண்டிக்கப்படவேண்டியவர்கள் – ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு

இலங்கையிலே இராணுவப் புலனாய்வாளர்கள், படையதிகாரிகள் போன்றோர் கைது செய்யப்படுவதாகவும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றிற்காகவே இக் கைதுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.

படையினர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக எந்தவொரு தாக்குதலையும் கொலையையும் மேற்கொள்ளவில்லை என்றும், இவ்வாறு படையினருக்கு எதிராக இடம்பெறுகின்ற கைதுகள்  நிறுத்தப்பட்டு படையினரைக் கொண்டு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட அரசியல் வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.

அண்மைக் காலங்களில் மைத்திரி அரசு மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிலரை விசாரணைக்கு உட்படுத்தியும் கைதுசெய்தும் இருந்தது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!