15 பேரின் உயிரைக் குடித்த மது – 33 பேர் மருத்துவ சிகிச்சையில் -மலேசியாவின் சிலாங்கூரில் துயரம்

சிலாங்கூரில் சில வகையான மதுபானம் அருந்திய 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 33 பேர் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும் மீதிப்பேர் இந்தியா, நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபானத்தை அருந்திய அவர்கள் திடீரென உயிரிழந்துள்ளதால் அவர்கள் அருந்திய மதுபான வகைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின் பின்னரேயே மரணத்திற்கான காரணங்களை கண்டறிய முடியும் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி உயிரிழப்புக்குக் காரணமானதென மூன்று வகையான மதுபானங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை mandalay whiskey, Kingfisher beer and Grand Royal Whiskey. ஆகும். மேற்படி மதுபானங்களை விற்பனை செய்த மதுபானசாலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!