10ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த மேல் வகுப்பு மாணவர்கள் – சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க முயன்ற பள்ளி நிர்வாகி மற்றும் மனைவி.

இந்தியாவின் உத்தரகண்டத்தில் பள்ளி ஒன்றிலே விடுதியில் தங்கிக் கற்றுவரும் பத்தாம் வகுப்பு மாணவியை மேல்வகுப்பு மாணவர்கள் நால்வர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந் நிலையில் கர்ப்பமடைந்த அச் சிறுமியை கர்ப்பத்தைக் கலைக்குமாறு வற்புறுத்தி பாடசாலை நிர்வாகி, அவர் மனைவி மற்றும் விடுதிக் காப்பாளர் ஆகியோர் மாத்திரை எடுக்கச் செய்துள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் மாணவியின் சகோதரி ஊடாக பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் பொலிசில் தெரிவித்ததை அடுத்து பாடசாலையின் நிர்வாகி , அவரது மனைவி, விடுதிக் காப்பாளர் மற்றும் பலாத்காரம் புரிந்த 4 மாணவர்கள் ஆகியோர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் – 14ல் நடைபெற்ற இச் சம்பவத்தின் பின்னர் சிறுமி அண்மையில்  சுகவீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதே இவ்வாறு இச் சம்பவத்தை மூடி மறைப்பதற்கு பாடசாலை நிர்வாகத்தால் முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!