சன்னிலியோனின் மறுபக்கம்! பார்ப்பதற்கு மட்டுமல்ல தெரிந்து கொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்குமான தொழிலதிபராக சன்னி!

“உங்களுடைய வெற்றியின் எல்லை என்பது உங்களுடைய தீர்மானமேயன்றி மற்றொருவரின் தீர்ப்பில் இல்லை”

சன்னிலியோன் என்னும் பெயர் உலகில் அதிகம் தேடப்படும் வாரத்தைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆம் சன்னிலியோன் என்கின்ற பெண்ணை நாம் அனைவரும் ஒரு ஆபாசப் பட நடிகையாக, திரைப்பட நடிகையாக பல இடங்களில் அறிந்திருப்போம். ஆனால் அந்த சன்னிலியோன் என்னும் மிகப் பெரும் பலம்வாய்ந்த நட்சத்திரத்தினை தொழிலதிபராக அறிந்திருப்போமா?

ஆம் கரெஞ்சித் கவுர் வோரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன்  சன்னிலியோனைப் பற்றி நாம் அறியாத இன்னுமொரு பக்கமும் இருக்கின்றது. அவர் உலக இளைஞர்களின் ஆசைகளையும் தூண்டுகின்ற ஆபாசப்பட நடிகையாகவும் கனவுக் கன்னியாகவும் இருக்கின்ற சன்னிலியோன்   மறுபுறம் ஒரு மிகப்பெரும் தொழிலதிபர்!

35 வயதான சன்னிலியோன் முன்னாள் வயதுவந்தவர் பொழுதுபோக்கு என நினைத்துள்ளார். இந்தியாவில் இன்டர்நெட்டில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் பாலிவுட் சன்னிலியோன்  என்ற நட்சத்திரத்திற்கான முடிவு அல்ல, அவரும் பல்வேறு வணிகத்திற்கான திட்டங்களைக் கொண்ட ஒரு தொழிலதிபரே ஒரு நடிகராக அங்கீகரிக்கப்படுவதைத் தவிர, அவர் “தொழில்முனைவோர்” என்று அழைக்கப்படவே விரும்புகிறார். அவர் சமீபத்தில் துபாயில் ஒரு வாசனை த் திரவியமான “லஸ்ட்” என்னும் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளமை இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

அவருடைய தொழில் ரகசியமாக மெதுவாக சீராக வளர்ந்து ஒரு வலுவான தொழில் தளத்தை உருவாக்குதலே ஆகும். அவர் ஆபத்துக்களைக் கண்டு அஞ்சாது தொழில்துறையில் நிலைத்து நிற்கும் ஒரு முன்னோடியாகக் காணப்படுகின்றார்.

சன்னிலியோன் காலடிபதித்து நல்ல அடித்தளத்தை இட்டுள்ள தொழில்துறைகள் என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1.லஸ்ட் வாசனைத் திரவியம்

 

இந்திய ரூபாயில் ரூ. 249 விலையைக் கொண்ட இந்த வாசனைத் திரவியம் சன்னிலியோனாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சென்டானது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள சென்ட் வகைகளில் ஒன்றாக உள்ளது.

2.பாக்ஸ் லீக் கிரிக்கெட் அணி சென்னை ஸ்வார்கர்ஸ் பங்குதாரர்

கிரிக்கெட் லீக்கிலும் பங்கதாரராக உள்ளார். தற்போது அது பெரும் சூது விளையாட்டாகவும் தந்திரமான வியாபரமாகவும் காணப்படுகின்றது.   பாலாஜி ஏக்த கபூரின் ஆதரவுடன் ஒரு ரியாலிட்டி ஷோ கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இவருடைய பங்களிப்பும்  அமைந்துள்ளது. ஷபீர் அலுவாலியா, மவுனி ராய், சாங்க்ராம் சிங் மற்றும் ரித்வி தஞ்சானி உள்ளிட்ட  நட்சத்திரங்கள் இந்தக்  குழுவில் உள்ளனர்.

3.ஸ்வீட் ட்ரீம்ஸ்

மொபைல் சிற்றின்பக் கதைகளின் தொகுப்பு விற்பனையானது மற்றுமொரு புறம் சன்னியின் தொழில் வாழ்ககையை உயர்த்திக் கொண்டுள்ளது. இந்தக் கதைகள் அனைத்தும் சன்னிலியோனாலேயே எழுதப்பட்டவை. ஜகர்நொட் செயலியில்  இந்தக் கதைகளை இரவு 10 மணிக்குப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு   வியாபராத் தந்திரமாகும்.

4.டீன்பட்டி ஒன்லைன் கேம்

கடந்த ஆண்டு டிசம்பரில் சன்னிலியோனினி் பெயரில் அவருடைய வர்த்தக   ஆன்லைன் விளையாட்டு தொடங்கப்பட்டது. இதில் விளையாபவர்கள்  பல நிலைகளைக் கடந்து விளையாடினால் .சன்னி லியோன் டிஜிட்டல் கலவையகங்களில் சில நிலைகளை கடந்து வெற்றி பெற வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. ட்ரெண்டிங்கில் உள்ள ஆன்லைன் கேம்கில் இதுவுமொன்றாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவரது வலைத்தளத்தை நிர்வகிக்க மற்றும் அவரது பிராண்ட் சுயவிவரத்தை விரிவாக்குவதற்காக  அவர் தானே  HTML, வீடியோ எடிட்டிங், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் ஆபாச நடிகை என்பதைத் தாண்டி தொழிலதிபராக சன்னிலியோனின் வளர்ச்சியானது பாராட்டத் தக்கதே!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!