தொட்டதற்கெல்லாம் அழுபவரா நீங்கள்? அழுகையினால் ஏற்படும் நன்மைகளை அழுவீர்களா?

நம்மில் சிலரை எடுத்துக்கொண்டால் அவர்கள் தொட்டதற்கெல்லாம் அழத் தொடங்கி விடுவார்கள். அடிக்கடி அழுபவர்கள் நம்மிடையே ஏராளம். அதுவும் பெண்களில் பலர் சொல்லவே தேவையில்லை. எதற்கெடுத்தாலும் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படியானவர்களை எண்ணி சிலர் சிரிப்பார்கள். ஆனால் அழுகையினால் எத்தனை நன்மைகள் உண்டென்று அறிவீர்களா?

உண்மையில் கண்ணீர்  எவ்வாறு உருவாகின்றது தெரியுமா?கண்ணீர்த் துளிகளானவை உப்பு நீரால் ஆனவை. இது கண்விழி தக்கவாறு சுழல்வதற்கேற்ப ஈரப்பசை தரும் சுரப்பி, இந்தச் சுரப்பியானது இயல்பான நீருக்கு மேல் அதிகமாகச் சுரப்பதால் கண்ணீர் ஏற்படுகிறது.

கண் எல்லா நீரையும் வடிக்க இயலாததால் மிகுதியான நீர் கண்ணீர்ப் பெருக்காக வெளியேறுகிறது.பொதுவாக மூன்று வகையான கண்ணீர் உண்டு! அட ஆச்சரியமாக இருக்கிறதா?…””அடித்தள கண்ணீர்””
Basal Tears என்கின்ற இந்தக் கண்ணீரை கண்கள் பாதுகாப்பாகவும் வழுவழுப்பாகவும் இருக்க, கண்ணீர் நாளங்கள் எப்போதும் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. இது தெளிவாகப் பார்க்கவும் உதவுகிறது. நாம் கண் சிமிட்டும்போது, இந்தக் கண்ணீர் நம் கண்கள் முழுவதும் பரவுகிறது.

“எதிர்வினைக் கண்ணீர்”‘ Reflex Tears என்கின்ற இந்தக் கண்ணீர் கண்களில் ஏதாவது தூசி விழுந்தால் அல்லது அதிக நெடியினால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் வருவதுதான் ஆகும்.. நாம் கொட்டாவி விடும்போதும் சிரிக்கும்போதும்கூட இந்தக் கண்ணீர் வருகிறது.

“உணர்ச்சி சார்ந்த கண்ணீர்”
Emotional Tears என்கின்ற இந்தக் கண்ணீர் மனிதர்களுடைய உணர்ச்சியின் வெளிக்காட்டாக வருவதுதான் ஆகும்.ஆழ்ந்த துக்கத்தையோ சந்தோஷத்தையோ நாம் வெளிக்காட்டும்போது இந்தக் கண்ணீர் வரும். எதிர்வினைக் கண்ணீரைவிட 24 சதவீதம் அதிக புரதம் இதில் இருக்கிறது. “கண்ணீர் விட்டு அழுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் எவை தெரியுமா?

நம் கண்ணீரே நம் கண்ணுக்கான கிருமி நாசினி மருந்து என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. கண்ணில் வளரும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளின் 95 சதவிகித வளர்ச்சியை 5 முதல் 10 நிமிடங்களில் கட்டுப்படுத்திவிடும். அழுகை என்பது ஒருவிதத்தில் ஆன்டி-டிப்ரசன்டாக (Anti-depressant) செயல்படுவதை நாமே உணர்ந்திருப்போம். ஒரு மனக்கஷ்டத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்திவிட்டால் ஒரு மலையையே இறக்கி வைத்ததுபோல உணர்வோம். அப்படி அழுவது சூழ்நிலையை மாற்றாவிட்டாலும் இறுக்கமான சூழலில் நாம் உழல்வதில் இருந்து விடுதலை தரும்.

நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது. மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் கொஞ்ச கொஞ்சமாக வெளியேறும். நம் உடலில் மனஅழுத்தத்துக்கு எனக் கார்டிசால் (Cortisol) என்ற ஹார்மோனை தூண்டும். இந்த ஹார்மோனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவுவது கண்ணீர்தான். மேலும், மனஅழுத்தத்தில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கக்கூடியது கண்ணீர். சோகத்தை மறக்க அழுவது என்பார்களே அது இதுதான்.நம் உடலில் உள்ள அதிகப்படியான மாங்கனீஸ் கண்ணீர் மூலம் வெளியேறிவிடும். ரத்தத்தில் உள்ள மாங்கனீஸ் அளவைவிட கண்ணீரில்தான் 30 சதவிகிதம் அதிகம் உள்ளது. அதன் அளவு சமன்பட கண்ணீர் உதவும்.

ப்படி பல்வேறு வகையிலும் ஆரோக்கியமான அழுகையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்காதீர்கள். இதனால் மனச்சுமைகள்தான் அதிகரிக்கும். வாய்விட்டு அழுதுவிடுங்கள். அழுகைதான் உங்கள் பாரத்தைக் குறைக்கும் முதல் நண்பன் என்பதை மறந்துவிடாதீர்கள்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!