காய்ச்சல் என மருத்துவமனைக்கு தன் 15 வயது மகளை அழைத்துச் சென்ற தாய்க்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

தனது மகளுக்குக் காய்ச்சல் என்று தெரிவித்து பதுளை வைத்தியசாலைக்கு பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரை அவரது தாயார்  அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அச் சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையை அழைத்து வந்த தாயார் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்ட பின் அங்கு குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது  சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணமானவர் என்று கருதப்படும் 21 வயது வாலிபர் ஒருவரைத் தேடிப் பொலிசார் வலைவிரித்துள்ளனர்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!