பேஸ்புக்கை மிகச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

பேஸ்புக்கைப் பற்றிய விவாதங்கள் பலவற்றைப் பலரும் பேசிப் பார்த்திருப்போம். சமீப காலங்களில், சில ஆய்வுகள் பேஸ்புக் மனநலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதை உறுதிபட எடுத்துக் காட்டுகிறது. சமூகவலைத் தளங்களில் அதிக நேரத்தைச் செலவளிப்பது என்பது மிகவும் பாரதூரமான  விடயம் ஆகும்.

“எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு“ என்பார்கள். அதுபோலத்தான் பேஸ்புக்கிலும் பல நன்மைகள் காணப்படுகி்னறன. 2 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பேஸ்புக் பயனர்கள், பேஸ்புக்கினைப் பயன்பாடுத்தி  சாதகமான விடயங்களை எப்படி பெற்றுக்கொள்வது என்பது மிகவும்  முக்கியமானது. அந்த விடயங்களை நாமும் அறிந்து வைத்திருப்போம்.

மாணவர்-ஆசிரியர் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம்

பேஸ்புக்கை ஒரு கல்விக்கான கருவியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள், அல்லது சமூகங்க விழுமிய உணர்வுகளை உருவாக்க விரும்பும் வகுப்புகள், ஒரு ஃபேஸ்புக் குழுவில் கல்வி தொடர்பான  தலைப்புகளைக் கொடுத்தல் போன்ற விவாத பக்கங்களை உருவாக்கி அதன் மூலமாக பரந்துபட்ட கல்விக்கான விவாதங்களை உருவாக்கி செயல்படுத்த முடியும்.

இந்த விவாதங்கள் சமூகத்தின் உணர்வை வளர்க்கின்றன, மேலும் மாணவர்களிடையே கலந்துரையாடல்களில் ஈடுபடும் தன்மையையும்  உருவாக்குகி்னறன. இவற்றை ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் இணைந்து செயற்படுத்தும்போது அது கல்விக்கான தளமாக நிச்சயம் உருவாக்கம் பெறும்.

. உற்பத்தித் திறனை அதிகரிக்க  முடியும்.

சமூக ஊடகங்கள்  பணியாளர்களை திசைதிருப்புவதாகவும் அவர்களை சோம்பேறிகளாக்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. உண்மையில் பேஸ்புக் தொடர்பாக பணிபுரிபவர்களிடம் நடத்திய ஆய்வில் ஒரு 10 நிமிட இடைவேளையில்  ஊழியர்கள் பேஸ்புக்கில் இருக்கும்போது  மகிழ்ச்சியாக, பல விடயங்களை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அதிக உற்பத்தி செய்வதற்கும் முயற்சிக்கின்றனர் என்று கண்டுபிடிக்கப் பட்டது.

வியாபாரத்திற்கான விளம்பரப் பக்கங்களை உருவாக்கலாம்

நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் பேஸ்புக் தற்போது உங்களுக்கான தளமே. ஏனெனில் பேஸ்புக் என்பது வெட்டிக் கதை பேசும் இடம் என்பதையும் தாண்டி தற்போது வியாபரத்திற்கான விளம்பரங்களைப் பதிந்து கொள்வதற்குமான வசதிகளை கொண்டுள்ளது.

வேலைவாய்ப்புக்களை கண்டுபிடிக்கவும் பெற்றுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

தற்போது அனைத்து நிறுவனங்களும் முகப்புத்தகத்தில் உள்ளன. நாம் அவற்றுடன் தொடர்புகளை பேஸ்புக்கிலேயே மேற்கொள்ள முடியும். வியாபார நிறுவனமாகினும் சரி ஏனைய சேவை நிறுவனம் ஆயினும் சரி அன்றாடம் தங்களுடைய தகவல்களை புதுப்பித்துக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் அங்கு நிலவும் வேலை வெற்றிடங்களைப் பற்றி இலகுவாக  அறிந்து கொள்ளவும் செய்யலாம்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!