சாப்பாட்டில் கீரைகளை ஒதுக்குபவரா நீங்கள்? கீரையில் உ்ள்ள மருத்துவ குணங்கள் எத்தனை தெரியுமா?

அது என்னவோ தெரியவில்லை சிறுவர் தொடக்கம் பெரியவர்கள் வரை கீரையை எப்படியாவது சாப்பாட்டிலிருந்து ஒதுக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால்  கீரையில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை அறிவீர்களா? அறிந்தால் ஒதுக்கிவிட மாட்டீர்கள்.

நம் உடலுக்குத் தேவையானஅவசியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும். கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்று நாம் தூக்கியெறிந்துவிடக் கூடாது. அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் உள்ள சத்துக்களை விட கீரையில் உள்ள சத்துக்கள் ஏராளம்..

உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.இரும்புச் சத்தானது  நம்முடைய உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும். இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை ஆகிய கீரைகளில் அதினமாகக் கிடைக்கிறது. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.ஒவ்வொரு கீரையிலும் உள்ள மருத்து குணங்களை அறிந்து கொள்ளலாம்.1.முருங்கைக் கீரை

இதனை வறுத்தும், பிரட்டலாகவும் , சாம்பாரில் கலந்தும் உண்ணலாம். இதனைக் காலை மாலை மிக்சியில் அரைத்து குடித்துவர மலக்கட்டு நீங்கும். நீரிழிவு நோய் குணமாகும். பிரம்ம விருட்சம் என முருங்கையானது அழைக்கப்படுகின்றது. முருங்கை ஆண்மை விருத்திக்கும் உரியதாகும். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை குறைக்கும்.  ரத்தத்தை சுத்தப்படுத்தும் அத்தோடு  இது ஒரு சத்து நிறைந்த கீரை, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்கும்.  வயிற்றுப்புண் ஏற்படாமலும் தடுக்கும். ஏனைய மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும்.2.வல்லாரை

வல்லாரையைத் தின்று பொல்லா வியாதியைப் போக்கு என்பது சித்தர் மொழி. வல்லாரையின் இலை ,தண்டு, வேர் யாவுமே மருத்துவ குணம் கொண்டவை.  புளி, மிளகாய், மஞ்சள், இஞ்சி, உப்பு சேர்த்து வல்லரை இலையைத் துவையலாகச் சாப்பிடலாம். காம்பு,வேர் முதலியவற்றை நீக்கி சுத்தப்படுத்தி வெந்நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால்  சீரான ரத்த ஓட்டமும் சுறுசுறுப்பும் ஏற்படும். வல்லாரை கீரையானது  சிறுநீரைப் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகவும் அமையும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும்.
3.பொன்னாங்கண்ணிக் கீரை

வெள்ளைப் பகு்களுடன் தோட்டங்களிலும் ஆற்றோரங்களிலும் வளர்ந்து வரும் கீரை இது. இது உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. பொன்னாங்கண்ணி தாய்ப்பாலை பெருக்கக் கூடிய ஒன்று. பித்தப்பை சீர்பெற இயங்கச் செய்யக் கூடியது. பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது. மைய நரம்புக் கூட்டத்தை சீர் செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் இல்லாமல் போகின்றன. பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.4.அகத்திக் கீரை

இது இலேசான கசப்புத் தன்மை வாய்ந்தது. உடல் சூடு பித்தம், வாந்தி உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் தாராளமாக இதை உண்ணலாம். சருமத்தில் ஏற்படும் படர் தாமரையை குணமாக்க இதன் சாற்றை பயன்படுத்த விரைவில் குணமாகும். நுரையீரல் கோளாறுகளுக்கும், பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் அகத்தி கீரை நன்கு பயன் தர கூடியதே.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!