இயக்குனர் முருகதாஸின் பிறந்த நாளுக்கு மிகப்பெரிய “சர்கார்” கொண்டாட்டம்..!

விஜய் – முருகதாஸ் இணைப்பில் மூன்றாவதாக உருவாகும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல் அக்டோபர் 2 ஆம் திகதி வெளியாக இருக்கின்றது அனைவரும் தெரிந்ததே.

சர்கார் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கின்றன என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அண்மையில் அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாய் நேற்றைய அறிவிப்பில் சர்கார் படத்தின் முதலாவது சிங்கிளினை செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த தினம் 25 ஆம் திகதி என்பதால் அதனை முன்னிட்டு 24 ஆம் திகதி வெளியாவுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!