இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு விரைகின்ற மகிந்த ஆதரவு அணி.

ஜெனிவாவில் தற்போது நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக மகிந்த ஆதரவு அணி ஒன்று சரத் வீரசேகர தலைமையில் ஜெனிவா நோக்கிச் செல்லவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றது.

முன்னதாக ஐ.நா பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாகவும் அதன்போது இலங்கையில் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும் முயற்சியாக ஜனாதிபதியால் அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதே நேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னால் முடிந்தால் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிக் காட்டட்டும் என்று சரத் வீரசேகர சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகிந்த சார்பு அணியின் ஜெனிவாப் பயணம் குறித்து எவ்விதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!