இலங்கை வடபகுதி யாழ்/அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி பளுதூக்கல் போட்டியில் வரலாற்று சாதனையை பதிவு செய்தது…!

இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சங்கம் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி கல்லூரியின் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.

 

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி நேற்று முன்தினம் கேகாலை டிப்பிட்டிய இராஜகிரிஜ மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கான 63 கிலோ நிறைப் பிரிவில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த எஸ். நிதுசா தங்கப் பதக்கத்தையும் அதே நிறைப் பிரிவில் பி.தாட்சாயினி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

58 கிலோ நிறைப் பிரிவில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த கோல்டாமேரி நான்காமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.. கல்லூரி வரலாற்றில் தேசிய மட்டத்தில் பதக்கத்தை கைப்பற்றியது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கனகரட்ணம் கனகராஜாவின் வழிகாட்டலில் அண்மைக் காலமாக கல்லூரி விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துவரும் நிலையில் முதல் தடவையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்திருப்பது கல்லூரிக்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!