இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட பளுதூக்கலில் வடமாகாண மாவவர்கள் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட பளுதூக்கலில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஜயபாஸ்கர் ஆஷிகா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதோடு சிறந்த பளுதூக்கல் வீராங்கானையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை கேகாலை டிப்பிட்டிய இராஜகிரிஜ மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களிற்கான 63 கிலோ நிறைப் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷிகா 176 கிலோ நிறையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஆஷிகா

18 வயதிற்கு உட்பட்ட பெண்களிற்கான பளுதூக்கலில் யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜெ. பஜீனா 95 கிலோ பளுவை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஜெ.பஜீனா

58 கிலோ எடைப் பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பி. டிலோஜினி 128 கிலோ பளுவை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இவர் 2016ஆம் 2017ஆம் ஆண்டுகளில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.டிலோஜினி

18 வயதிற்கு உட்பட்ட ஆண்களிற்கான 85 கிலோ நிறைப் பிரிவில் சென்ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த த. அபிஷேக் 152 கிலோ நிறையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.    அன்பிற்கினிய நேயர்களே, தினந் தோறும் ராசி பலன், சுடச் சுட சினிமா செய்திகள், உலக, உள்ளூர் செய்திகள், இவற்றினை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் Browser இல் puradsi.com எனத் தேடுங்கள் / கூகிளில் puradsi.com எனத் தேடுங்கள்.

த.அபிஷேக்

16 வயதிற்கு உட்பட்ட 62 கிலோ நிறைப் பிரிவில் ஆண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த றொ. எக்லேசியா 119 கிலோ பளுவை தூக்கி தங்கப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.

றொ. எக்லேசியா

அதேவேளை இப் போட்டிகளில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கான 63 கிலோ நிறைப் பிரிவில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த எஸ். நிதுசா தங்கப் பதக்கத்தையும் அதே நிறைப் பிரிவில் பி.தாட்சாயினி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 58 கிலோ நிறைப் பிரிவில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த கோல்டாமேரி நான்காமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்..

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!