கொள்ளையர் குழுவில் பெண்ணும், சிறுவனும் – கிராப் டாக்சியில் கைவரிசை காட்டி வந்த குழு கைதானது…!

மலேசியாவின் தலைநகரிலே அம்பாங் . செலாயாங் உட்படப் பல்வேறு பகுதிகளில் கிராப் டாக்சி ஓட்டுநர்களை மடக்கி அவர்களிடமிருந்து பெருமளவான பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டு வந்த 9 பேர் கொண்ட குழு ஒன்றை மலேசியப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இக் குழுவில் 15 வயதுச் சிறுவனும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். அத்தோடு நாற்பது வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவரும் அக் குழுவில் இடம்பெற்றிருந்துள்ளார். இவர்கள் குழுவாகச் செயற்பட்டு கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இக் குழுவினர் பயணிகள் போல நடித்து கிராப் டாக்சி ஓட்டுநர்களை மறித்து மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் அவர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடமிருந்து பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டு வந்துள்ளனர்.


பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட போதிலும் அக் குழுவின் தலைவன் கைதுசெய்யப்படவில்லை என்றும் அவனைப் பொலிசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!