மூன்று வயதுச் சிறுமியை நரபலி கொடுத்த பெண் மந்திரவாதியின் திடுக்கிட வைக்கும் விளக்கம்….!

இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தின் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி முருகாயி தம்பதியினரின் 3 வயது மகள் ஷாலினி கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடியும் காணாத நிலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் அக் குழந்தை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் தீவிர விசாரணையினையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கின்ற பெண் மந்திரவாதியாகிய சின்னப்பொண்ணு என்பவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது.

தனது மந்திர சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காகவே தான் அச் சிறுமியை நரபலி கொடுத்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார் அப் பெண் மந்திரவாதி. தற்போது மந்திரவாதி பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!