தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார்.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திப் பேசிய குற்றச்சாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பீபி கைது செய்ப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது எனினும் அவர் பாகிஸ்தன் உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்திருந்தார்.

 

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணையில் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரம் இல்லை என்று கடந்த மாதம் அவரை விடுதலை செய்திருந்தது.


ஆனால் இத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் விடுதலை செய்யப்பட்ட ஆசியா வெளியே வந்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேற வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் மறு விசாரணை மீதான முடிவு வெளிவரும் வரைக்கும் ஆசியா நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாது என்று இம்ரான்கான் அரசு அறிவித்தது. அதனால் போராட்டங்கள் அங்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.


இந்நேரத்தில் ஆசியாவின் கணவர் தங்களை அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் ஆசியா தீர்ப்பின் பின்னர் ஒருவாரமாகியும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை. எனினும் அவர் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் எங்கு செல்கின்றார் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை.


”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!