கலிபோர்னியா மதுபான சாலையில் துப்பாக்கிப் பிரயோகம் – 13 பேர் மரணம்..

அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தின் தௌசன்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள மதுபானசாலை மீது இனந்தெரியாத நபர்மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 13 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்லூரி இசைவிழா ஒன்று அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அங்கே இருநூறு பேர்வரையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.


இச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் 10 பேர் வரையிலும் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத் தாக்குதல் சம்பவத்தில் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களய் அதிகரித்துச் செல்கின்றன. அண்மையில் யோகா மையத்தில் இரு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் யூத செபக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலிலும் 11 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!