தாதியின் உயிரைப் பறித்த கேடான நட்பு…!

வேலூரின் கீழ்மணவூரைச் சேர்ந்த கதிரேசன் அனிதா (28 வயது) எனும் தாதி வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில் வேலூர் அருகேயுள்ள சதுப்பேரி ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அனிதாவின் கணவர் கதிரேசனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதோடு அவ்வூரைச் சேர்ந்த பினான்ஸியர் அஜித்குமாரே தன் மனைவியைக் கடத்திச்சென்று கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து அஜித்குமார் தலைமறைவாகிய நிலையில் பொலிசார் விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகளை அறிந்துள்ளனர். அனிதாவுக்கும் அஜித்குமாருக்கும் இடையே இருந்த நட்பான பழக்கம் அண்மையில் காதலாக மாறியுள்ளதாகவும் கடந்த தீபாவளித் தினத்தன்று அவர் அஜித்குமாருடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் கோபமடைந்த கதிரேசனுக்கும் அனிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அதன் பின்னர் கதிரேசன் ஆட்டோ ஓட்டத்திற்கு சென்றுவிட்ட நிலையில் அங்கு சென்றிருந்த அஜித்குமாரிடம் கணவருக்கு விடயம் தெரியவந்துள்ளதால் தமது தொடர்பை நிறுத்திக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். எனினும் அதனை ஏற்காத அஜித் அனிதாவுடன் தனிமையில் பேச வேண்டும் என்று அங்கிருந்து கூட்டிச் சென்றுள்ளார்.


இந்நிலையில் அனிதா உடல் ஏரியிலிருந்து மீட்கப்பட்டதால் அவரை அஜித்குமர் கொலைசெய்து ஏரியில் வீசியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தலைமறைவான அஜித்குமாரைப் பொலிசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!