பேரப் பிள்ளைகள் மேல் கொண்ட ஆசையால் மருமகளை உயிரோடு புதைத்த வயதான தம்பதியினர்…!

தமது சொந்த பேரப் பிள்ளைகளை தஙடகளுடன் சேர்த்துக் கொள்வதற்காக தமது மருமகளை உயிரோடு புதைத்துக் காங்கிரீட் இட்டுக் கொலை செய்த பிரேசிலைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளைப் பொலிசாரி கைது செய்துள்ளார்.

பிரேசில் நாட்டின் பாலோ நகரைச் சேர்ந்த மார்சியா மிரண்டா என்பவர் கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், அக் குழந்தைகளை கணவனது பெற்றோர் தாம் எடுத்து வளர்ப்பதற்கு விரும்பியுள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் அவர்கள் தமது திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக மிரண்டாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்துள்ளனர். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அண்மையில் தானாக அது கிடைத்துள்ளது.
தனது பிள்ளைகளின் பெயர்களில் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்காக மிரண்டா தனது மாமனார், மாமியாரைப் பார்ப்பதற்கு சென்றுள்ளார் .அந்நேரத்தில் தாம் புதிதாக வாங்கிய குடியிருப்பு நிலத்தைப் பார்வையிட அவர்கள் மிரண்டாவை நிர்ப்பந்தித்து அழைத்துச் சென்றுள்ளனர்.


அங்கு அவர்கள் மிரண்டாவை உயிரோடு புதைத்துவிட்டு புதைக்கப்பட்ட இடத்தின் மேல் காங்கிரீட் இட்டு மூடி மறைத்துள்ளதாகவும், அதன் பின்னர் அது பற்றி ஏதும் தெரியாதது போல் இருந்தும் உள்ளனர்.


இந்நிலையில் பொலிசாரின் விசாரணையில் அவர்கள் பிடிபட்டதும் உண்மை தெரியவந்துள்ளது. அதன் பின்னர் மிரண்டாவின் உடல் அப் பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டபோது அது மிகவும் சிதைந்து போயிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!