இலங்கை ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் .. பொலிஸ் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்…!

இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இலங்கைப் பொலீஸ் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டத்தின் 43 ஆவது பந்திக்கு அமைய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் மற்றும் கடமைப் பொறுப்புக்கள் சம்பந்தமான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றே இன்று வெளியிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இனி பொலிஸ் திணைக்களம் செயற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் இலங்கை பொலீஸ் திணைக்களமானது சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!