இன்றைய நாளும் இன்றைய பலனும். 09.11.2018

நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.இன்றைய பஞ்சாங்கம்
09-11-2018, ஐப்பசி 23, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 09.20 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 08.34 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 08.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மிதுனம்:உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

சிம்மம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோசனை கேட்பீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும்.

கன்னி:பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வராது என்றி ருந்த பணம் கைக்கு வரும்.விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்: தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் தொலைந்த பொருள் திரும்பக்கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு:உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.

மகரம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மீனம்:நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!