உறுப்பினர்கள் கட்சி தாவாது இருக்க ஐக்கிய தேசியக் கட்சி கைக்கொள்ளும் தந்திரம் – மைத்திரி வெளியிட்டார்.

இலங்கை அரசியலில் கடந்த 26 இன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அங்கு இரு தரப்புக்களுக்கு தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பம் முதலே தனக்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு என்று அமைதிகாத்து வருகின்றார்.

அதே நேரம் தற்போது அதிபர் மைத்திரியால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் தாங்கள் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர். இதிலிருந்தே அவர்கள் பெரும்பான்மை பலத்திற்காக முயன்றுள்ளமையை அறியலாம்.


வெளிப்படையாகவே ஏனைய சிறுபான்மைக் கட்சியினரை அழைத்து கலந்துரையாடல் என்ற பேரில் பேரம்பேசல்கள் ஊடாக ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் ஆளும் தரப்பு ஈடுபட்டு வருகின்றது.


இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். அத்தோடு ஐ.தே.க வின் இளைஞர் அணியினர் சிலத் தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுக்குமாறு தன்னிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!