டி 20 உலகக் கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்கும் தகுதியை இழந்த இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள்…!

வரும் 2 ஆயிரத்து 20 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது  ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பைத் தொடரில் நேரடியாகப் பங்குபற்றக் கூடிய தகுதியை இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் இழந்து விட்டதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஐ.சி.சி யின் விதிப் பிரமாணங்களுக்கு அமைய டி20 தரவரிசைப்படுத்தலில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே நேரடியாகப் போட்டியில் பங்கேற்று விளையாட முடியும் என்று கூறப்படுகின்றது.

 

இந் நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளே முதல் எட்டு இடங்களில் இருக்கின்றன. இலங்கை 9 ஆவது இடத்திலும் பங்களாதேஸ் 10 ஆவது இடத்திலும் இருப்பதால் இவை நேரடியாகப் போட்டியில் பங்கேற்க முடியாது.

 

இந்நிலையில் இப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாயின் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வெற்றிபெற வேண்டும். அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் வரும் அக்டோபர் 18 தொடக்கம் நவம்பர் 15 வரை இடம்பெற இருக்கின்றது. இதனால் இவ் அணிகளின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!