காதலியுடன் பழகிய மருமகன் – ஆத்திரத்தில் மாமனார் செய்த வேலை – 3 வருடத்தின் பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை…!

தனது காதலியுடன் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் அடைந்த மாமனார் மருமகனைக் கொன்று அவரது சடலத்தை தான் வசித்துவந்த வீட்டின் பலகணியின் கீழ் புதைத்துவிட்டு வெளியே சென்ற மருமகன் காணாமல் போய்விட்டதாக பொலிசில் மனுக்கொடுத்து 3 வருடங்களாக தான் செய்த தப்பை மறைத்து வாழ்ந்துள்ளார். அண்மையில் அவர் மருமனைக் கொன்று புதைத்த விடயம் பொலிசாருக்குத் தெரியவந்ததை அடுத்து அவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்த பிஜய் குமார் என்பவரே இவ்வாறு தன் மருமகனைக் கொலை செய்துள்ளார். இவர் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்துள்ள நிலையில் அவரது காதலி டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றதில் அவரும் அங்கு சென்று வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

அச்சமயத்தில் அவரது மருமகன் ஜெய் பிரகாஸ் டெல்லியில் வேலைக்கு வந்துள்ளார். இதனால் மாமனாருடன் அவரும் தங்கியுள்ளார். இந் நிலையில் பிஜய் வெளி வேலைகளால் பல வேளைகளில் வீட்டில் இருப்பதில்லை. அவ்வாறான நிலையில் அவரது காதலிக்கும் பிஜயின் மருமகனுக்கும் தொடர்பு இருந்துள்ளதை அறிந்துள்ளார். இதனால் மருமகன் நித்திரையில் இருந்த நேரத்தில் பழுதடைந்த மின்விசிறி ஒன்றினால் தலையில் அடித்துக் கொலை செய்து பல்கனியின் கீழ் புதைத்துள்ளார். சில காலத்தின் பின்னர்  அங்கிருந்து விலகி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார்.

னா

தற்போது வீட்டு உரிமையாளர் வீட்டைப் புதுப்பிப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது ஜெய்யின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் பிஜய் குமாரைக் கைது செய்துள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!