அகதிகளின் கூடாரங்களை அடித்து நொருக்கிய பொலிசார்…

வனப் பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் அகதிகள் உணவு தேடிச் சென்ற போது அவர்களின் கூடாரங்களை அடித்து நொருக்கியதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தக் குளிர்காலத்தில் நூற்றுக்கணக்கான ஈரான் அகதிகளின் ஒரே உறைவிடமான கூடாரங்களை அவர்கள் நாசம் செய்ததோடு. அதை படம் பிடிக்கச் சென்ற நிருபர்களின் கமராக்களும் பிடுங்கி உடைக்கப்பட்டன.ஈரானிய அகதிகள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்காக பிரான்சின் CALAIS துறைமுகத்தைப் பயனபடுத்துகின்றனர்.

 

 

இரண்டு மாதங்களில் 300 ற்கும் அதிகமான ஈரான் அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் பிரித்தானிய உள்துறைச் செயலர் Sajid Javid, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக 539 அகதிகள் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரும் அகதிகளில் பெரும்பாலானோர் ஈரானியர்கள். அவர்களில் 230 பேர் டிசம்பரில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளார்கள்.வடக்கு பிரான்சில் உள்ள வனப்பகுதியில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ள அகதிகள், ஒவ்வொரு நாள் காலையிலும் தங்கள் கூடாரங்களை விட்டு விட்டு, மனிதநேய அமைப்புகள் வழங்கும் உணவு மற்றும் உடையை சேகரிப்பதற்காக கடந்து செல்கிறார்கள்.

 

 

அவ்வாறு செல்லும் அகதிகளின் கூடாரங்களே அடித்து நொருக்கப்படுகின்றன நேற்றும் அப்படித்தான் நடந்தது. சில ஈரானிய அகதிகள் உணவு தேடிச் செல்ல சிலர் தங்கள் கூடாரங்களில் இருந்தார்கள்.அப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் இருந்த கூடாரங்களை அடித்த நொருக்கியுள்ளனர்.

குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், கூடாரங்களை மட்டுமே நம்பி இருக்கும் அந்த அகதிகளில் வாழ்வையும், தன்மானத்தையும் காக்க இரு நாடுகளும் பெரிதாக எதுவும் செய்ய முன்வரவில்லை.மாறாக அராஜகமே செய்கின்றனர்.

இந்த அகதிகளின் வருகையைத் தடுப்பதற்காகவே சமீபத்தில் பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து தங்கள் கடல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த ஒப்பந்தம் செய்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!