40 வருடப் பாசப் போராட்டம் தாயைத் தேடும் சேய்…

40 வருடம் கழித்து  பெற்ற தாயைத் தேடி தமிழகம் வந்துள்ள டென்மார்க்கை சேர்ந்த டேவிட் கிலெண்டால் என்பவர் தன்னை பெற்றெடுத்த தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்துள்ளார். டேவிட் கிலெண்டால் நீல்சனின் உண்மையான பெயர் சாந்தகுமார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஜன 25 ஆம் திகதி 1978ம் ஆண்டு தனலட்சுமி-கலியப்பெருமாள் என்ற தம்பதிக்குப் பிறந்தவர்.இவர்களிற்கு  இரண்டு ஆண் பிள்ளைகள் குடும்பச் சூழலின் காரணமாக இந்த இருவரையும் பெற்றோர் மெட்ராஸ் கிறிஸ்டைன் குழந்தைகள் காப்பகத்தில் 1978ல் விட்டுவிட்டனர்.

 

இதில் கைக்குழந்தையாக இருந்த டேவிட் 1979ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் 2013ல் சென்னை வந்த அவர் தனது சகோதரனான மானுவேல் ராஜன் என்பவரைக் கண்டு பிடித்து சந்தித்துள்ளார்.பின்னர் இருவருமாக சேர்ந்து தமது பெற்றோரைத் தேடி வருகின்றனர்.

 

இவர்களுக்கு உறுதுணையாக குழந்தைக் கடத்தலைத் தடுப்பதற்காக போராடிவரும் அருண் தோஹ்லே மற்றும் அஞ்சலி பவார் ஆகியோரின் உதவி கிடைக்க, இவர்களைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது.

 

பேஸ்புக்கில் Like செய்ய!!

செய்தியைப் படித்த காப்பகம் நடத்திவரும் ஒரு கிறித்தவ பெண், தனலட்சுமியின் புகைப்படம் கிடைக்க உதவி செய்திருக்கிறார். 40 வருடங்களின் பின் பெற்ற தாயை பார்த்து வியந்த டேவிட்
போஸ்டரில் சேர்த்து வண்ணாரப்பேட்டை பகுதியில் தேடத் தொடங்கியபோது, கோவிந்தராஜன் என்பவர் தனலட்சுமியைத் தெரியும் என்றும் தற்போது எண்ணூரில் குடியிருப்பதாகவும் தகவல் கூறியுள்ளார். தனலட்சுமியின் இரண்டு மகன்களும் தங்களது தாயை தேடிச் சென்றுள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

error: Alert: Content is protected !!