காணாமல் போன இளைஞனின் கால் மட்டும் சாலையில் – உடல் 20 மணித்தியாலங்களின் பின் லாரி ஒன்றிலிருந்து மீட்பு…!

திருவள்ளூர் மாவட்டத்தின் அத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் காக்களூர் தனியார் கம்பனி ஒன்றில் வேலை செய்துவந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ளதாக பொலிசாருக்குத்  தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் அச் சாலையிலிருந்து வலது கால் ஒன்றினை மட்டும் மீட்டுள்ளனர். உறவினர்களிடம் காண்பித்ததில் அது சுதாகருடையது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சுதாகரின் உடல் அப்பகுதி எங்கும் காணப்படவில்லை. உடலைக் காணாது குழப்பத்தில் இருந்த பொலிசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கமெராக்களை ஆராய்ந்து பார்த்ததில் சுதாகர் லாரி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த கார் ஒன்றில் மோதுண்டு லாரி ஒன்றில் அவரது உடல் தூக்கி வீசப்படுவதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் லாரி ஒன்றில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக 20 மணித்தியாலங்களுக்குப் பின்னர் பெரிலசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. பொலிசார் அவ்வுடல் சுதாகருடையதுதான் என்று உறுதிசெய்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!