கடலில் மூழ்கிய சிறுவன் – பயத்தில் காப்பாற்றாமல் கரை சேர்ந்த நண்பர்கள்…அவதானம் பெற்றோர்களே…!

ஏறாவூர் – புன்னக்குடா கடலில் சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று ( 11/01/2019) பிற்பகலில் கண்டெடுக்கப்பட்டது செங்கலடி குமார வேலியார் கிராமத்தை சேர்ந்த குவேந்தின் ஹரீஸ்வருத்தன் என்ற மாணவனின் சடலமே அதுவென்று பெற்றோரால் அடையாளங்காணப்பட்டுள்ளது. ஹரீஸ்வருத்தன் செங்கலடி மத்திய கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்விகற்கின்றார். நேற்று முன்தினம் பாடசாலை சென்று வீடு திரும்பிய அச் சிறுவன் மதிய உணவின் பின்னர் தலை முடி வெட்டுவதற்காக தாயிடம் நூறு ரூபா பணம் பெற்று வெளியே சென்றுள்ளான்.

இந்நிலையில் மாலையாகியும் மகன் வீட்டுக்குத் திரும்பி வராததால் பெற்றோர் சலூனுக்குச் சென்று விசாரித்ததில், சிறுவன் முடி வெட்டிக்கொண்டு சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் உறவினர் அயலவர் வீடுகளில் தேடியும் சிறுவன் இல்லாத நிலையில் இரவு முழுவதும் பெற்றுறோர் விழித்திருந்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மறுநாள் பொலிசில் அறிவித்ததன் பேரில் அவனது நன்பர்களை பொலிசார் பாடசாலையில் சென்று விசாரித்ததில் தலைமுடி வெட்டிய பின்னர் தாங்கள் ஐவர் கடலுக்கு குளிக்கச் சென்றதையும், அப்போது ஹரீஸ்வருத்தன் நீரில் மூழ்கியதையும், பயத்தில் தாங்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்ததையும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் கடலில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பாக அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படின் உடனடியாக காவல் துறையுடனே உரிய தரப்புடனோ தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!