இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். இன்றைய பஞ்சாங்கம் 12.01.2019, மார்கழி 28, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 10.05 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 08.43 வரை பின்புஉத்திரட்டாதி. மரணயோகம் காலை 08.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் -1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல்10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

மேஷராசி நேயர்களே: இன்று உத்தியோக ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும் நாளாகும் . வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்கள்ஆரோக்கியத்தில் கூடிய அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபராசி அன்பர்களே: இன்று உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தேவையான பணம் கையில் இருக்கும். சிலருக்கு பணி ரீதியாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.. வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வேலைத்தலத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரம் சிறக்கும்.

மிதுனராசி காரர்களே: உங்கள் குடும்பத்து மனக் குறைகளை நண்பரிடம் கூறி ஆறுதல் பெறுவீர்கள். தேவையான உதவி கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். மேலதிக வருமானம் வந்து சேரும். நீங்கள் நினைத்திருந்த முக்கியமான செயல் எளிதாக நிறைவேறும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும்.

கடகராசி நேயர்களே: கடந்த சில நாட்களாக இருந்துவந்த அலைச்சல், கோபம் யாவும் நீங்கும். உறவினர் கள் உதவுவார்கள். வியா
பாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

சிம்மராசி அன்பர்களே: இன்று உங்களுக்கு மந்தமான நாளாகும். நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். . வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை இன்று தவிர்த்துக் கொள்வது நல்லது.

கன்னி ராசி காரர்களே: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். திடீர் பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் நன்மை இருந்தாலும் செலவுகளும் ஏற்படக்கூடும். தொழில் ஸ்தலத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

துலாராசி உறவுகளே: சிலர் உங்களுக்குத் தந்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படுவார்கள். உங்கள் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் செழிக்க புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணவரவு தேவைக்கேற்ற அளவில் ஓரளவுக்கு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவதன் ஊடாக ஆரோக்கியத்தைப் பேணலாம்..

விருச்சிகராசி நேயர்களே: வாழ்வில் முன்னேற புதுப்புது திட்டங்கள் போடுவீர்கள் . சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலிடத்தில்சுமூகமான நிலை காணப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசுராசி அன்பர்களே: இன்று உங்கள் வியாபார நடவடிக்கைகளில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். வாகனம் சம்பந்தமான திருத்தங்களுக்கு செலவிட நேரும். கற்றலில் ஈடுபடு◌ாருக்கு புதிதான புரிதல்கள் ஏற்படும். உறவுகளுடன் வீண் முரண்பாடுகளை விடுத்து அவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நாளை நன்மையானதாக மாற்றிக் கொள்ளலாம்.

மகரராசி காரர்களே: இன்று உங்கள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். இல்லாள் உங்களுக்கு டிசலவுகளை ஏற்படுத்தக் கூடும். வியாபாரத்தில் வழக்கமான செயற்பாடே நடக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்

கும்பராசி உறவுகளே: இன்று நீங்கள் அதிக பொறுப்புணர்வுடன் பணியாற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். சில தேவைகளை நிறைவேற்ற சிறிது கடன் பெறும் நிலை ஏற்படலாம். உடல் நலனில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வேளா வேளைக்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

மீனராசி நேயர்களே: இன்று உங்கள் வாயைக் கொஞ்சம் அவதானமாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒன்று கூறப்போக அது வேறொன்றாக மாறிவிடலாம். யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வேலையாட்களுடனும் சுமூக உறவு காணப்படாது. இன்று நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என்று இருங்கள்.

error: Alert: Content is protected !!